பயங்கரம்.. கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளான கார்..ஒருவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயம்..!



terrible-car-crashed-due-to-loss-of-control-1-dead-and

பெங்களூா் கேக்கதாசபுரம் பகுதியை சேர்ந்த சின்னபசப்பா, சுதா, பாக்யஸ்ரீ , அருண் மற்றும் 4 வயது குழந்தை உட்பட 5 பேர் காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்கள். அந்த காரை அருண் ஓட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர்கள் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 12 மணியளவில் நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததாக தெரிகிறது. இதனால் அந்த கார் கட்டுப்பாடின்றி தரைப்பாலம் மீது மோதி சாலையில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

accident

இந்நிலையில் காரில் இருந்த அனைவரும் படுக்காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் காரில் இருந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த  5 பேருக்கும் அங்கு முதலுதவி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுதாவின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுதாவை மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.