ஆவேசமான கோயில்யானை! குழந்தைபோல வளர்த்த பாகனுக்கு துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்! பகீர் சம்பவம்!

ஆவேசமான கோயில்யானை! குழந்தைபோல வளர்த்த பாகனுக்கு துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்! பகீர் சம்பவம்!



temple-elephant-attacked-in-thirupparankundram

மதுரை திருப்பரங்குன்றம் முருகன்கோவிலுக்கு கடந்த 3½  வருடங்களுக்கு முன்பு அசாம் மாநில வனப்பகுதியில் இருந்து 10 வயதுமிக்க பெண்யானை ஒன்று வாங்கப்பட்டு வளர்த்துவந்துள்ளனர்.  தெய்வானை என்ற இந்த யானை அங்கு வந்த ஆரம்பத்தில் முரண்டு பிடித்துள்ளது. பின்னர் அங்கிருந்த பாகன்கள் கொடுத்த தீவிர பயிற்சியால் நாளடைவில்  மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் நன்றாக ஒத்துழைத்து வந்துள்ளது. மேலும் சாமி ஊர்வல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளது. 

ஆனால் தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் யானையை பராமரித்து தொடர்ந்து பயிற்சி அளித்து வந்துள்ளனர். இவ்வாறு நேற்று மாலை கோவிலுக்குள், யானை மண்டபத்தில் மதுரையைச் சேர்ந்த துணைபாகன் காளி என்பவர் தெய்வானை யானையை குளிக்கவைக்க முயற்சி செய்துள்ளார்.

Thirupparankundram

அப்போது யானை திடீரென்று ஆவேசமடைந்து, தனது தும்பிக்கையால் காளியை தூக்கி,   சுவரில் மாறிமாறி அடித்து,  பின்னர் காலால் எட்டி உதைத்து வீசியது. மேலும் அவர் யானையிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அலறியும் பயனில்லை.  இந்நிலையில் அவரது சத்தம்கேட்டு ராஜேஷ் என்ற மற்றொரு துணைப்பாகன் அங்கு ஓடி வந்தபோது அவரையும் யானை தாக்க முயன்றுள்ளது. ஆனால் அவர் அங்கிருந்து சுவரேறி குதித்து உயிர் தப்பினார்.  

பின்னர் அவரும் கூச்சலிட்டதை  தொடர்ந்து கோவில் ஊழியர்கள் அங்கு விரைந்து, யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்ததில்அதற்கு கோபம் குறைந்தது. பின்னர் யானையை கட்டியுள்ளனர். பின்னர் பலத்த காயத்துடன் அங்குகிடந்த பாகன் காளியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.