தமிழகத்தை குளிர்விக்கப்போகும் மழை.. குளுகுளு அறிவிப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தை குளிர்விக்கப்போகும் மழை.. குளுகுளு அறிவிப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம்..!


Tamilnadu Weather Update

12 ஆம் தேதி முதல் 5 நாட்களில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "12 ஆம் தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 13 ஆம் தேதியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

14 ஆம் தேதியில் தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்யலாம். 15 ஆம் தேதியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

tamilnadu

16 ஆம் தேதியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். கன மழைக்கான எச்சரிக்கையாக, இன்று கனமழை முதல் அதிகனமழை தென் தமிழகம் மற்றும் ஒருசில உள் வடக்கு மாவட்டங்களில் பெய்யலாம். 

நாளை தென் தமிழகத்தில் பரவலான இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் 24 மணி நேரம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.