மட்டமான சரக்கை அடிக்கும் தமிழக குடிமகன்கள்.. விலையேற்றத்தால் வேதனை என ஆதங்கம்.!Tamilnadu Liquor

தமிழ்நாட்டில் மதுபானத்தை விலை பிப். 7 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. மதுபான வகைகளை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.60 வரை பணம் உயர்த்தப்பட்ட காரணத்தால், குடிமகன்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். வழக்கமாக, மதுபான விலையேற்றத்திற்கு பின்னர் ஒரு வாரம் மது விற்பனை சரிவை சந்தித்து மீண்டெழும்.

இந்த நிலையில், கடந்த பிப். மாதத்தில் உயர்த்தப்பட்ட மதுபான விலையின் காரணமாக, குறைந்த விற்பனை அதிகரிக்கவில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 10 % மதுபான விற்பனையானது குறைந்துள்ளது.

இதில், நடுத்தர மற்றும் உயர்ரக மதுபான விற்பனை குறைந்த அளவில் இருப்பதாகவும், அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் குடிமகன்கள் சாதாரண மூன்றாம் தர மதுபான வகையின் விலை, முந்தைய நடுத்தர மதுபான வகை விலையை ஒத்து உள்ளது என ஆதங்கப்படுகின்றனர். 

தினமும் மதுபானம் அருந்தி வந்த குடிமகன்கள், விலை காரணமாக 2 நாட்களுக்கு ஒருமுறை மதுபானம் வருந்துவதாகவும் தெரியவருகிறது. வெயில் காரணத்தால் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளன.