தமிழகத்தில் முதல்முறை திருநங்கை கொரோனாவால் பாதிப்பு.! மொத்த எண்ணிக்கை 2,757 ஆக உயர்வு.!

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோன வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 37,336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,223 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியாவில் வரும் மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தை பொருவத்தவரை சமீபகாலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 231பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது.
இதில், மாநிலத்தில் முதல் முறையாக சென்னையை சேர்ந்த 48 வயது திருநங்கைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.