தமிழகம்

பாதிப்பைவிட அதிகமாகும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..! குறைய தொடங்கிய இறப்பு எண்ணிக்கை.! இன்றைய கொரோனா நிலவரம்.!

Summary:

TamilNadu current corona update status

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட பாதிப்பு நிலவரம், பரிசோதனை முடிவுகள் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் அறிவித்துவருகிறது. அந்தவகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்றைய பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.

இன்றுமட்டும் தமிழகத்தில் 97 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் (அரசு மருத்துவமனை -67 | தனியார் மருத்துவமனை -30). இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா  மரணம் 6,614 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக 6,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,25,456 பேர் குணமடைந்துள்ளனர். 53,282 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement