தமிழகம்

திடீரென பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.. 5 பேர் பலி.!

Summary:

Sudden fire in cracker industry

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.

வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றுள்ளனர். அப்போது நாட்டு பட்டாசு தயாரிக்கும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. அந்த விபத்தில் ஆலையின் உள் வேலை செய்து வந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்தில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைக்கு முறையாக உரிமம் வாங்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement