தலை முடியை பிடுங்கி சித்ரவதை.. 3 வயது பிஞ்சு கொடூர மரணம்.. தாயின் 2 வது கணவன் வெறிச்செயல்.!
பச்சிளம் குழந்தையை கொலை செய்ததாக தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் திருமணம்:
3 Year Old Baby Killed: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், வைகோ நகரில் வசித்து வருபவர் சுவாதி (வயது 22). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துரைப்பாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய விஷ்ணுபிரியா என்ற மகள் இருக்கிறார்.
இதையும் படிங்க: உன்னுடைய போதைக்கு பொண்டாட்டி, புள்ள ஊறுகாய்யா.... 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...! சிவகாசியில் நடந்த அதிர்ச்சி....!!!
பிரிவு:
இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக சுவாதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குடும்ப செலவுக்காக வெம்பக்கோட்டையில் செயல்படும் பட்டாசு ஆலையில் சுவாதி வேலையும் பார்த்து வந்துள்ளார்.

பழக்கம்:
அச்சமயம், அதே ஆலையில் வேலை பார்த்து வந்த சிவகாசி பேராபட்டியில் வசித்து வரும் விக்னேஸ்வரன் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்து வாழலாம் என்று முடிவெடுத்து, 20 நாட்களுக்கு முன்னர் திருமணமும் செய்துள்ளனர்.
குழந்தை கொலை:
திருமணத்துக்குப்பின் திருத்தங்கல் பசும்பொன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று இரவில் விக்னேஸ்வரன் சுவாதி மற்றும் அவரது குழந்தையை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். குழந்தையின் தலை முடியை பிடுங்கியதில், பச்சிளம் பிஞ்சு பரிதாபமாக உயிரிழந்தது.

விசாரணை:
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர் விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: குழந்தை பிறந்து 30 நாட்கள் தான் ஆகுது.. ஆன்லைனில் பணம் இழந்த காவலர் விபரீதம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!