குழந்தை பிறந்து 30 நாட்கள் தான் ஆகுது.. ஆன்லைனில் பணம் இழந்த காவலர் விபரீதம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.! 



30-Day-Old Baby Left Behind: Chennai Police Constable Dies by Suicide After Online Gambling Losses

ஆன்லைனில் பணத்தை இழந்த காவலர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

ஆண் குழந்தை: 

சென்னையில் உள்ள கே.கே. நகர் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு துறையில், காவலராக வேலை பார்த்து வருபவர் விஸ்வநாத் (வயது 27). இவரின் சொந்த ஊர் தருமபுரி ஆகும். திருமணம் முடிந்து மனைவி இருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இவரின் மனைவிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.  

இதையும் படிங்க: பாட்டி கூறிய அந்த வார்த்தை.. ஆத்திரத்தில் பேத்தி அரங்கேற்றிய கொடூர சம்பவம்.. கரூரில் துயரம்.!

12 ஆண்டுகளாக.. 

விஸ்வநாத் கடந்த 12 ஆண்டுகளாக பரங்கிமலை தண்டுமா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், திருமணத்துக்குப்பின் மனைவியுடன் இருக்கிறார். தற்போது குழந்தையும் பிறந்துள்ளது. இதனிடையே, நேற்று இரவில் விஸ்வநாத்தை பார்க்க அவரின் நண்பர்கள் சென்றனர்.  

Crime news

தற்கொலை: 

அப்போது, விஸ்வநாத் தூக்கிட்டு தற்கொலை செய்தவாறு அறையில் சடலமாக தொங்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பரங்கிமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் விஸ்வநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணை: 

இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விஸ்வநாத் ஆன்லைனில் விளையாடி பணத்தை இழந்து இருந்ததும், நண்பர்களிடமும் கடன் வாங்கியதும் தெரியவந்தது. இதனால் கடன் மனஉளைச்சல் காரணமாக விஸ்வநாத் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: நான் அப்பாவாகும் தகுதி இல்லை., நீ எப்படி கர்ப்பமான? 5 மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்துக்கொலை.. கணவன் வெறிச்செயல்.!