பாட்டி கூறிய அந்த வார்த்தை.. ஆத்திரத்தில் பேத்தி அரங்கேற்றிய கொடூர சம்பவம்.. கரூரில் துயரம்.!
கல்விச்சான்றிதழை வாங்கித்தர மறுத்த பாட்டியை ஆத்திரத்தில் பேத்தி கொலை செய்தார்.
மூதாட்டி:
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, புத்தூரில் வசித்து வருபவர் மூதாட்டி பாப்பம்மாள். இவரின் பேத்தி சுகிதா (வயது 26). பாப்பம்மாளுடன் அவரின் மூத்த மகள் மஞ்சுளாவும் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: "என் பொண்டாட்டிய உன் மகன் கூட்டிட்டு போறான்" மகனின் கள்ளக்காதலால் தந்தை பலி.. கோவையில் ரணகொடூரம்..!
கல்விச்சான்றிதழ்:
இதனிடையே, ஒருசில குடும்ப பிரச்சனை காரணமாக சுகிதாவின் கல்விச்சான்றிதழை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்கு தாயாரின் அனுமதி தேவை என பாப்பம்மாள் கூறி இருக்கிறார். இதுதொடர்பாக சம்பவத்தன்று சுகிதா தனது பாட்டி, பெரியம்மா மஞ்சுளா ஆகியோருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
கொலை:
அப்போது, பாட்டி தாயின் அனுமதியின்றி கல்விச்சான்றிதழை வாங்க முடியாது என்று கூறவே, ஆத்திரமடைந்த சுகிதா ஸ்குரூ டிரைவர் கொண்டு பாட்டியை குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மஞ்சுளா காயம் அடைந்தார்.
விசாரணை:
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு மூதாட்டியின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. மஞ்சுளா திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த சுகிதா கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ரூ.30 கொடுக்க மறுத்த பாட்டி கொடூரமாக குத்திக்கொலை.. பேரன் வெறிச்செயல்.. சேலத்தில் ஷாக் சம்பவம்.!