ரூ.30 கொடுக்க மறுத்த பாட்டி கொடூரமாக குத்திக்கொலை.. பேரன் வெறிச்செயல்.. சேலத்தில் ஷாக் சம்பவம்.!



16-Year-Old Boy Arrested for Allegedly Stabbing Grandmother to Death Over ₹30 in Salem

பணம் கொடுக்க மறுத்த பாட்டியை கொலை செய்ததாக பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பதிகள்:

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி, கொங்கணாபுரம், கரட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரின் மனைவி காந்தாயி (வயது 75). தம்பதிகளுக்கு 3 மகள்கள், சுப்பிரமணி என்ற மகன் இருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனியே வசித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

படிக்கவில்லை:

சுப்பிரமணி மற்றும் அவரின் மனைவி கன்னியம்மாள் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டனர். இதனால் தம்பதிகளின் 16 வயது மகனை பாட்டி காந்தாயி, உறவினர் அபிஷேக்கின் வீட்டில் தங்க வைத்து கவனித்து வந்துள்ளார். இதனிடையே, படிக்க பிடிக்காத சிறுவன் ஒன்பதாம் வகுப்புக்குப்பின் மேற்படி படிக்கச் செல்லவில்லை.

Crime news

ரூ.30 பணம் கேட்டு கொலை:

இதனிடையே, சிறுவன் பாட்டியிடம் செலவுக்கு ரூ.30 பணம் கேட்டுள்ளார். பாட்டி பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த சிறுவன் பாட்டியின் பின் மண்டையில் அடித்துள்ளார். மேலும், தான் மறைத்து அளித்த கத்தியை எடுத்து கழுத்து, வயிற்றில் குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் காந்தாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்துக்குப்பின் சிறுவன் கெங்கணாபுரம் காவல் நிலையத்தில் சரணடையவே, அதிகாரிகள் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனிடம் விசாரணை நடக்கிறது.

இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!