சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!
திருவிழாவுக்காக ஊருக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி வாய்த்தகராறில் வாழ்க்கையை இழந்தது. ஒருவரின் உயிரும் பறிபோனது.
கள்ளக்காதல் பழக்கம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கங்கணம்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரின் மகன் ஆனந்தராஜ் (வயது 28). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக புதுச்சேரி சென்றவர், திருமணமான பவானி (வயது 56) என்ற பெண்ணுடன் பழகி இருக்கிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

திருவிழாவுக்கு வந்தார்கள்:
இந்த பழக்கம் இவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஆனந்தராஜ் பவானியுடன் கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். பின் இருவரும் திருப்பூருக்குச் சென்று வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது கோயில் திருவிழாவுக்காக கிராமத்துக்கு வந்திருந்தனர்.
சம்பவ இடத்திலேயே மரணம்:
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மதுபோதையில் இருந்த ஆனந்தராஜ், பவானியிடம் சமைக்கவில்லையா? என கேட்டு இருக்கிறார். இது இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை உண்டாக்கிய நிலையில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் பவானியை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் பவானி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!