சொத்து, அரசு வேலைக்காக தாய் கூலிப்படை ஏவி கொலை.. நெஞ்சை பதறவைக்கும் மகளின் கொடூர செயல்.. அம்பலமானது எப்படி? 



Daughter Allegedly Hires Contract Killer to Murder Mother for Government Job and Property

தந்தையின் மூலமாக தாய்க்கு கிடைத்த அரசு வேலையை தனக்கு வேண்டும் என நினைத்த மகள், தாயை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

நீதிமன்ற ஊழியர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், பிரதாப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் விஜய் குமார் ஷர்மா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவரின் மனைவி நீரஜ் ஷர்மா (வயது 45). தம்பதிகளுக்கு ஆயுஷி ஷர்மா என்ற 23 வயதுடைய மகள் இருக்கிறார். ஆயுஷ் ஷர்மாவின் சகோதரர் ராகேஷ் பரத்புரில் வசித்து வருகிறார். நீதிமன்ற ஊழியரான விஜய் குமார் ஷர்மாவின் மரணத்துக்குப்பின், கருணை அடிப்படையில் நீரஜ் ஷர்மாவுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தூக்க மாத்திரை கொடுத்து கணவர் கொலை.. கள்ளக்காதலுக்காக மனைவி ஷாக் செயல்.!

அரசு வேலைக்காக சண்டை:

ஆனால், தாய் பார்த்து வரும் வேலை தனக்கு வழங்கப்பட வேண்டும் என ஆயிஷி எப்போதும் தாயிடம் சண்டையிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது மாமா மோகன் ஸ்வரூப் (வயது 56) என்பவருடன் கூட்டுசேர்ந்து தாயை விபத்தை ஏற்படுத்தி கொலை செய்து வேலையை பெறலாம் என்ற விபரீத எண்ணத்திற்கு ஆயுஷி வந்துள்ளார்.

Crime news

உயிர் தப்பினார்:

இதனால் தாயை கொலை செய்ய முயற்சிகள் எடுத்தும் பலன் அளிக்காத நிலையில், ரூ.7 லட்சம் கொடுத்து 20 வயதுடைய ஹேமந்த் ஷர்மா என்ற கூலிப்படை நபரை தேர்வு செய்துள்ளனர். இவர்களின் திட்டப்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கொலை முயற்சி நடந்தபோது, நல்வாய்ப்பாக நீரஜ் தப்பி இருக்கிறார். பின் இதுதொடர்பான உண்மை அறிந்து தனது சகோதரர் ராகேஷிடம் தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார். 

கொலை சம்பவம்:

அவர் குடும்பத்தை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியும் பலனில்லாத நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி  நீரஜ் ஷர்மா எஸ்யுவி கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். முதலில் விபத்து போல அனைத்தும் சித்தரிக்கப்பட்டாலும், ராகேஷ் கொடுத்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீரஜின் தினசரி பயணத்தை பின்தொடர்ந்து, அதிவேகத்தில் காரை மோதி கொலை செய்துள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதில் நீரஜ் ஷர்மா உயிரிழந்து இருக்கிறார்.

Crime news

விசாரணைக்குப்பின் அனைத்து உண்மையும் அம்பலமாகவே, காவல்துறையினர் ஆயுஷி, அவரின் மாமா, மாமாவின் மகன், கூலிப்படை நபர் என 6 பேரை கைது செய்தனர். சொத்துக்காகவும் கொலை நடந்துள்ளதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு வேலைக்காக பெற்ற தாயையே துடிதுடிக்க கொன்ற மகள்....! மாமா கூட சேர்ந்து போட்ட திட்டம்... விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!