குழந்தைகள் நலக்குழு உறுப்பினரால் தனியார் மையத்தில் சிறுமி வன்கொடுமை.. மதுரையில் ஷாக் சம்பவம்.. உடந்தையாக வார்டன்..
தனியார் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வார்டன்:
மதுரை மாவட்டத்தில் உள்ள டி. கல்லுப்பட்டி, சித்தூரில் பெண் குழந்தைகளுக்கான தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. இந்த தனியார் குழந்தைகள் இல்லத்தில் தங்கிருது இளம் சிறுமிகள் பயின்று வருகிறார்கள். இந்த இல்லத்தில் வார்டனாக வேலை பார்த்து வருபவர் மெர்சி அன்னபூரணி (வயது 42).
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!
நலக்குழு உறுப்பினர்:
இந்த இல்லத்திற்கு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜசக்திவேல் (வயது 44) அவ்வப்போது வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே, இவ்வாறு வரும்போதெல்லாம் கயவன் ராஜசக்திவேல் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை:
அதாவது, சிறுமியிடம் தனக்கு தண்ணீர் வேண்டும் என எடுத்துவரச்சொல்லி அத்துமீறியது நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பேரையூர் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவே, அதிகாரிகள் ராஜசக்திவேல் மற்றும் அன்னபூரணியை தேடி வருகிறார்கள்.
வேலியே பயிரை மேய்ந்த கதை:
மேலும், தனியார் இல்லத்திற்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்த 16 குழந்தைகள் மாற்று முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் நல இல்லத்தில், குழந்தைகள் நலத்துறை அதிகாரியே செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் நலத்துறையில் இருந்துகொண்டு குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய உறுப்பினரே சிறுமிக்கு எதிராக கொடூரத்தை அரங்கேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரம் விளையாட அழைத்து சிறுமியிடம் சீண்டல்.. விழுந்த தர்ம அடி.. திருச்சியில் பரபரப்பு.!