கேரம் விளையாட அழைத்து சிறுமியிடம் சீண்டல்.. விழுந்த தர்ம அடி.. திருச்சியில் பரபரப்பு.!
16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பங்க் ஊழியருக்கு தர்ம அடி விழுந்த சம்பவம் சமயபுரத்தில் நடந்துள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியர்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், சமயபுரம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தாஸ் (வயது 42). இவர் இருங்களூரில் செயல்படும் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
கேரம் விளையாடலாம்:
இவரின் வீட்டருகே 10 வயது மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். இவர்களிடம் தாஸ் கேரம் விளையாடலாம் எனக்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் சீண்டல்:
அங்கு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரியவரும் நிலையில், பதறிப்போன சிறுமிகள் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர்.
போக்ஸோவில் கைது:
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தாஸை பிடித்து அடித்து உதைத்த நிலையில், லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒப்படைத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்ஸோவில் தாஸை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!