Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!
சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், க. சென்றாயபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பையா. இவரின் மகன் பெரிய அப்பண்ணசாமி (வயது 37). இவர் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கும் சிறார்களுக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
பாலியல் தொல்லை:
விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், இவர் வழக்கம்போல சிலம்பம் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். அப்போது, பயிற்சியில் இருந்த 15 வயது சிறுமியிடம் அப்பண்ணசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சிறுமியிடம் நெருங்கி பழகத் தொடங்கிய நபர், தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்:
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூற இயலாமல் தவித்த நிலையில், பின் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
போக்ஸோவில் கைது:
இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பண்ணசாமியை கைது செய்தனர். மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை தனிப்பட்ட பயிற்சிக்கு அனுப்பு முன், ஆசிரியர் தொடர்பான விபரத்தை அறிந்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.