தூக்க மாத்திரை கொடுத்து கணவர் கொலை.. கள்ளக்காதலுக்காக மனைவி ஷாக் செயல்.!



Wife Allegedly Murders Husband with Sleeping Pills Over Extramarital Affair

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தூக்கத்தில் இருந்த கணவருக்கு மனைவி செய்த பகீர் செயல் பதறவைத்துள்ளது.

தொழிலாளி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அநாகப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் அப்பல நாயுடு. இவரின் மனைவி ஹேமா. தம்பதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டுச் செல்வார்.

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

Crime news

கள்ளக்காதல்:

இதனிடையே, வீட்டில் இருந்த ஹேமாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கங்காதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவர, அவர்கள் அப்பலநாயுடுவுக்கு தகவல் சொல்லியுள்ளனர். நேரில் வந்த அவர் மனைவியை கண்டிக்கவே, கேட்கவில்லை. கணவர் வேலைக்குச் சென்றதும் கள்ளக்காதல் தொடர்ந்த நிலையில், கணவரை கொலை செய்யும் திட்டமும் நடந்துள்ளது.

Crime news

கொலை சம்பவம்:

இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த அப்பலநாயுடுவுக்கு சாப்பிட மனைவி உணவு கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்த நிலையில், அதனை சாப்பிட்டவர் தூங்கி இருக்கிறார். பின் இவர்களின் திட்டப்படி கூலிப்படையை வரவழைத்து கொலை சம்பவம் நடந்துள்ளது. பின் கொள்ளை சம்பவம் போல பாவித்த நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது. விசாரணைக்குப்பின் கங்காதர், ஹேமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையைச் சேர்ந்த 3 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவன்.. துள்ளத்துடிக்க கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.!