கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவன்.. துள்ளத்துடிக்க கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.!
கர்ப்பிணியான மனைவியை காலால் எட்டி உதைத்து கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஐடி தம்பதிகள்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், நுப்ரா பகுதியில் வசித்து வருபவர் கவுரவ் அணில் (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகளுடன் அணிலின் தாயார் அபர்ணா அணில் ஹரேக்கரும் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!
கருக்கலைப்பு முயற்சி:
இதனிடையே, கவுரவ் அணில் மற்றும் அவரின் மனைவி ஐடி துறையில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த கவுரவின் மனைவியிடம் கருவை கலைக்க வற்புறுத்தி இருக்கின்றனர். இந்த விஷயத்துக்கு பெண்மணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி கொடூர கொலை:
இதனால் சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கவுரவ், தனது கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்து தாக்கி இருக்கிறார். இதனால் கர்ப்பிணி பெண் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின் அவர் உடல்நலக்குறைவால் இறந்ததுபோல தாயும்-மகனும் சித்தரித்துள்ளனர்.
இருவர் கைது:
ஆனால், சகோதரியின் மரணம் தொடர்பாக சந்தேகம் தெரிவித்த பெண்ணின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் தற்போது உண்மை அம்பலமாகி இருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் கவுரவ், அபர்ணா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!