'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!



Chhattisgarh Crime 22-Year-Old Woman Stabs Boyfriend to Death for Ignoring Calls

காதலியின் நம்பரை பிளாக் செய்த காதலன் கொலை செய்யப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிளசிப்பூர் பகுதியில் வசித்து வருபவர்கள் ரோஷினி சூரியவன்ஷி (வயது 22). இதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமதா பிரசாத் சூரியவன்ஷி (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டுள்ளனர். பின் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனர்.

காதலன் நெஞ்சில் குத்தி கொலை:

இதனிடையே, கடந்த 3 நாட்களாக காதல் ஜோடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் ஒருகட்டத்தில் காதலன் தனது காதலியின் அழைப்பை நிராகரித்து வந்துள்ளார். நம்பரையும் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோஷினி சம்பவத்தன்று தனது காதலனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பெண்மணி கத்தியால் காதலனை நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

Crime

போனை எடுக்காததால் சம்பவம்:

இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த கமதாவின் நண்பர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரோஷினியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், காதலன் தனது அழைப்பை எடுக்காத காரணத்தால் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது.