அடேங்கப்பா... வெறும் 3 மாதத்திலே ரூ.22 ஆயிரம் கோடி கடன்…! அப்போ தவெக ஆட்சி முடியும்போது ரூ.20 லட்சம் கோடியா? தங்கம் தென்னரசுவின் ஷாக்கிங் அப்டேட்..!!!



thangam-thennarasu-criticises-tvk-first-budget

தமிழகத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன. அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக அரசின் வரவு-செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

கடன் சுமை அதிகரிக்கும் என எச்சரிக்கை

ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஐந்தாண்டு ஆட்சியின் முடிவில் மாநிலத்தின் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்று ஏற்கனவே கூறியிருந்ததை தங்கம் தென்னரசு நினைவூட்டினார். நிதித்துறை செயலாளரின் சமீபத்திய பேட்டியே கடன் சுமையை குறைப்பது சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.22 ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளதுடன், ரூ.3 ஆயிரம் கோடி மூலதனச் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஜெபமாலையுடன் நிதியமைச்சர்.. திருமாவளவன் சொன்ன வார்த்தை.. திருச்சியில் விறுவிறுப்பு பேட்டி.!

வருவாய் உயர்த்தும் திட்டங்கள் இல்லை என விமர்சனம்

மாநிலத்தின் சொந்த வருவாயை அதிகரிக்கவும், வருவாய் கசிவுகளை தடுக்கவும் தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் விமர்சித்தார். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டுகளில் அரசு மேலும் ரூ.10 லட்சம் கோடி வரை கடன் பெற வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் புறக்கணிப்பு?

பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதையும், தொல்லியல் துறைக்கு வெறும் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதையும் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் உள்ளிட்ட தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: உங்க ஆட்டம் இதோட முடுஞ்சுட்டு... கடந்த ஆட்சியின் ஊழல் லிஸ்ட் ரெடி! திமுகவின் Party Fund நாடகம் அம்பலம்? பட்ஜெட் கூட்டத்தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு!!!