உங்க ஆட்டம் இதோட முடுஞ்சுட்டு... கடந்த ஆட்சியின் ஊழல் லிஸ்ட் ரெடி! திமுகவின் Party Fund நாடகம் அம்பலம்? பட்ஜெட் கூட்டத்தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு!!!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை
உரையாற்றிய அமைச்சர், கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அரசு விரிவான வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், கட்சி நிதி (Party Fund) விவகாரத்தில் திமுகவின் உண்மையான நிலை மக்கள் முன் வெளிப்படும் என்றும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: BREAKING: பாஜகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் பாண்டி ரவி! அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!!!
2029 தேர்தல் குறித்து நம்பிக்கை
2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் முடிவுகள் நாடு முழுவதும் கவனிக்கப்படும் என்றும் மரிய வில்சன் கூறினார். அந்த மாற்றத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியத்துடன் பார்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து உறுதி
மேலும் பேசிய அவர், மாணவர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் நீட் தேர்வு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கடந்த 5 வருஷம் என்னதான் நடந்துச்சு! சீக்ரட் ஆர்டர் கொடுத்த CM.... அடுத்த வாரம் வெளியாகும்..! மொத்தமாக அம்பலப்படுத்தப் போகும் அரசு..!!!