3 வயது சிறுவன் மர்ம மரணம்.. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு.!



3-Year-Old Boy Found Dead in Well While Playing Near Home in Kallakurichi

கிணற்றில் 3 வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டார்.

தம்பதி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம், மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரின் மனைவி பூமிகா (வயது 25). தம்பதிகளுக்கு லஷ்வின் என்ற 3 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறார்.

இதையும் படிங்க: பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!

வீட்டுக்கு வரவில்லை:

நேற்று மதியம் சிறுவன் லஷ்வின் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டு இருந்தார். பின் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை தேடி இருக்கின்றனர். பின் அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இருப்பாரோ? என்ற எண்ணத்தில் இறங்கி பார்த்துள்ளனர்.

Crime news

சடலம் மீட்பு:

அப்போது, சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்படவே, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் நேரில் வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!