15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!
கண்மாய் பகுதியில் மாணவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 வயது சிறுவன்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரையூர் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன். இவரின் மகன் அஸ்வின் (வயது 15). சிறுவன் அஸ்வின் அங்குள்ள சிறுகாளாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!
மதுபானம்:
தற்போது பள்ளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். ஆனால், பள்ளிக்கு அவர் செல்லவில்லை என தெரியவருகிறது. மேலும், மாலை 4 மணியளவில் சிறுவன் நண்பர்களுடன் கண்மாய் பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. பின் சிறுவன் வீட்டுக்கு வரவில்லை.

சிறுவன் சடலம் மீட்பு:
சிறுவன் வீட்டுக்கு வராத காரணத்தால் கண்மாய் பகுதியில் தேடிப்பார்த்தபோது, சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!