ரௌடிக்கு ஸ்கெட்ச் போட்ட இளசுகள்.. வாழ வேண்டிய வயதில் நேர்ந்த சோகம்.. கம்பி எண்ணும் 6 பேர்.! 



Chennai Rowdy Murder: 6 Arrested, Including Minor, Over Ajay's Killing

ரௌடியை கொலை செய்ததாக சிறுவன் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கொலை: 

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!

விசாரணை: 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, அவர் ஓட்டேரி தலைமைச் செயலக காலனி, எஸ்.வி.எம் நகரில் வசித்து வரும் ரௌடி பலி ஆடு என்ற அஜய் (வயது 20) என்பது உறுதி செய்யப்பட்டது. இவரின் மீது தலைமை செயலகம் காலனி காவல் நிலையத்தில் pala வழக்குகளும் நிலுவையில் இருப்பது அம்பலமானது. 

chennai

அரங்கேறியது எப்படி? 

சம்பவத்தன்று, மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் வசித்து வந்த திருநங்கையை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, பின் திரும்பியபோது 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஓட்டேரியைச் சேர்ந்த அருண்ராஜ் (வயது 27), தனுஷ் (வயது 22), தமிழரசன் (வயது 28), சுனில் (வயது 20), சிவா (வயது 23), 17 வயது சிறுவன் என 6 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். முன்விரோதத்தில் கொலை நடந்தது உறுதியானது.

இதையும் படிங்க: காதலியை பார்த்துவிட்டு வரும்வழியில் இளைஞருக்கு நடத்த கோர மரணம்.. சென்னையில் ஷாக்.!