காதலியை பார்த்துவிட்டு வரும்வழியில் இளைஞருக்கு நடத்த கோர மரணம்.. சென்னையில் ஷாக்.!
இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாறுபட்ட கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேருக்குநேர்:
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, எம்.சி. சாலையில் வசித்து வருபவர் வசந்தகுமார் (வயது 21). இவர் நேற்று இரவில் சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, இவர் பயணித்த வாகனமும், எதிர்திசையில் பயணம் செய்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி இருக்கிறது.
இதையும் படிங்க: ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்.. கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்.!
துள்ளத்துடிக்க மரணம்:
இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பு வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் உண்டாகிய நிலையில், மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர், வசந்தகுமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.
அதிகாரிகள் விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பூக்கடை காவல்துறையினர் நேரில் வந்து வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சம்பவத்தன்று தனது காதலியை சந்தித்துவிட்டு வந்துகொண்டு இருந்தார்.
அப்போது கொலை சம்பவம் நடந்ததால் காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது இருசக்கர வாகனம் மோதியதில் வாக்குவாதம் கொலையில் முடிந்ததா? என விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொடூரமாக கொலை.. ஓடஓட விரட்டி சம்பவம்.. மதுரையில் பரபரப்பு.!