பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!



in Kallakurichi 17 Year Old Boy Dies by Suicide While Mother Condemns Bank Passbook forgot Issue

தந்தையின் வங்கிக்கணக்கு புத்தகத்தை மகன் தொலைத்ததை கண்டித்த நிலையில், சிறுவன் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

கல்லூரியில் சேர இருந்தார்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், மாடாம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 41). இவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 38). தம்பதிகளுக்கு விஷ்வா என்ற 17 வயதுடைய மகன் இருக்கிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்துவிட்டு, கள்ளக்குறிச்சியில் செயல்படும் தனியார் கல்லூரியில் படிக்க எஞ்சினியரிங் பிரிவுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: "தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!

கண்டிப்பால் மனமுடைந்தார்:

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக விஷ்வா தந்தை ஆனந்தனின் வங்கிக்கணக்கு புத்தகத்தை வெளியே எடுத்துச் சென்றுள்ளார். பின் அது தொலைந்துவிட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து விஷ்வா தாயிடம் தெரிவித்த நிலையில், தாய் மகனை கண்டித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த நிலையில் விஷ்வா காணப்பட்டுள்ளார்.

Crime news

தூக்கிட்டு தற்கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மாடாம்பூண்டி, சித்தேரி ஏரிக்கரையில் இருக்கும் புளியமரத்தில் விஷ்வா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருபாலப்பந்தல் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மது, கஞ்சா போதைக்கு அடிமை.. தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திவிட்ட பேரன்.. குலைநடுங்கவைக்கும் சம்பவம்.!