சற்றுமுன்.... ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு! குஷியில் குத்தாட்டம் போடும் ரசிகர்கள் கூட்டம் !!!
Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!
பள்ளி நூற்றாண்டு விழாவில் விஷப்பூச்சி கடிதத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளியின் மாணவ-மாணவியர்கள் ஆர்வத்துடன் தயாராகி வந்துள்ளனர். நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகளும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
3ம் வகுப்பு சிறுமி:
இந்நிலையில், அங்குள்ள மாதேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரின் இரண்டாவது மகள் ரக்ஷிதா (வயது 8). சிறுமி பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் நேற்று கலைநிகழ்ச்சிக்காக தயாராகி வந்துள்ளார். அப்போது, விஷப்பூச்சி ஒன்று சிறுமியை கடித்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: 'என் ஆடு செத்துப்போச்சு'.. ஸ்காலர்ஷிப் பணத்தில் ஆடு வாங்கிய மாணவர் மரணம்.!

பரிதாப மரணம்:
இதனால் சிறுமி மயங்கி விழவே, உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆண்டுவிழாவுக்காக தயாரான சிறுமி விஷப்பூச்சி கடித்து பலியான சம்பவம் உள்ளூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.