'என் ஆடு செத்துப்போச்சு'.. ஸ்காலர்ஷிப் பணத்தில் ஆடு வாங்கிய மாணவர் மரணம்.!



ITI Student Who Bought Goat Using Scholarship Savings Dies by Suicide 

கல்வி உதவித்தொகையை சேமித்து வாங்கிய ஆடு இறந்ததால் ஐடிஐ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டி. இவருக்கு 18 வயதுடைய செந்தில் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் ஐடிஐ மெக்கானிக்கல் பயின்று வரும் நிலையில், பல மாதங்களாக தனக்கு கிடைக்கும் கல்வி உதவித்தொகையை சேமித்து வைத்து செம்மறி ஆட்டை வாங்கியுள்ளார்.  

தற்கொலை முயற்சி:

அதனை தினமும் கவனித்து வந்த நிலையில், கனமழை காரணமாக சமீபத்தில் ஆடு இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: தென்காசியில் அரசு வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.!

விருதுநகர்

சிகிச்சை பலனின்றி மரணம்:

இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.