#Breaking: தென்காசியில் அரசு வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.!



Tenkasi Government Lawyer Hacked to Death Inside Office; Lawyers Protest Demanding Arrest of Two Attackers 

தென்காசியில் அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் கொலை செய்யபட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் முத்துக்குமாரசாமி. இவர் கூலக்கடை பஜார் பகுதியில் சொந்தமாக அலுவலகம் நடத்தி வந்த நிலையில், இன்று மர்ம நபர்களால் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது அலுவலகத்திற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கி தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். 

அரசு வழக்கறிஞர்

அரசு வழக்கறிஞர் கொலை:

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வழக்கறிஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே அரசு வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இரண்டு நபர்கள் எந்த ஒரு பயமும் இன்றி இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றதால், அவர்களை கைது செய்யக்கோரி தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பாக 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் தென்காசி பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!