AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
கோவை மகளிர் விடுதியில் தங்கி இருந்த மனைவியை கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்ற கணவர், அதனை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி ஸ்ரீபிரியா. இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா தனது கணவரை பிரிந்துள்ளார். தற்போது அவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அங்கு தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரம்:
இந்த நிலையில், ஸ்ரீபிரியாவுக்கு அவரது உறவினர் இசக்கி ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பாலமுருகனுக்கு இசக்கி ராஜா அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் நேற்று இரவில் கோவை வந்துள்ளார். பின் அதிகாலை நேரத்தில் தனது மனைவி தங்கியிருந்த விடுதிக்கு சென்று இருக்கிறார். அங்கு மனைவியிடம் வாக்குவாதம் செய்து சண்டையில் ஈடுபட்ட பாலமுருகன், தான் கொண்டு வந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
மனைவியின் சடலத்துடன் செல்பி:
இந்த சம்பவத்தில் ஶ்ரீபிரியா நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஶ்ரீபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவியின் கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. மேலும் மனைவியை கொலை செய்து விட்டு கணவர் அதனை செல்பி எடுத்து