சாலையில் உலா வந்த 10 அடி நீளம் கொண்ட முதலை! என்னம்மா நடக்குது..... அதிர்ச்சி காட்சிகள்..!!!
குஜராத் மாநிலத்தில் மனிதர்கள் வாழும் நகரப்பகுதிகளுக்குள் காட்டு உயிரினங்கள் புகும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வதோதரா நகரில் நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் உலா வந்த முதலை
வதோதராவில் சுமார் 10 அடி நீளம் கொண்ட இரண்டு மக்கர் முதலைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் சாதாரணமாக உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு முதலை சாமா–சாவ்லி சாலையில் உள்ள ஊர்மி பாலத்தின் மீது மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த காட்சியை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. “முதலை தெருவில் நடைப்பயிற்சி செய்வது போல இருக்கிறது” என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பார்க்கும்போதே பதறுதே! ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்! நொடியில் வந்த முதலை! பெண்ணை தண்ணீருக்குள் இழுத்து.... திக் திக் காட்சி!
வனத்துறையினரின் மீட்பு நடவடிக்கை
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போக்குவரத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தி நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த முதலையை பாதுகாப்பாகப் பிடித்து மீட்டனர்.
அதே நாளில் ஜம்புவா பாலம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியிலும் மற்றொரு பெரிய முதலை காணப்பட்டது. அங்கு சென்ற வனத்துறையினர் அதைவும் பாதுகாப்பாக பிடித்து மீட்டனர்.
நகருக்குள் புகும் முதலைகள் – காரணம் என்ன?
வதோதரா நகரில் பாயும் விஸ்வாமித்ரி ஆற்றில் அதிக அளவில் முதலைகள் வசித்து வருகின்றன. நீர்மட்டம் மாறும்போது அல்லது இரை தேடும் போது அவை அருகிலுள்ள நகரப்பகுதிகளுக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், இரு இடங்களிலும் வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்ததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நகரப் பகுதிகளில் காட்டு உயிரினங்கள் தோன்றும் நிகழ்வுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Chill this is Vadodara 🐊🐊
Crocodile went to hang on the Urmi Bridge of Vadodara!#Vadodara pic.twitter.com/M7Cmk5Zc1d
— My Vadodara (@MyVadodara) March 5, 2026
இதையும் படிங்க: அந்த பொண்ணு என்ன தப்பு பண்ணுச்சு.....கண்ணிமைக்கும் நொடியில் உயிரே போச்சே! கதறும் குடும்பம்! பகீர் வீடியோ...!!!