திரைக்கு வெளியே உள்ள சிவாஜி கணேசன்! அமெரிக்கா தெருக்கூத்தை அசால்டாக பாடிய வீடியோ....! "மூச்சு வாங்குதா மாமா?" ஆசையாக கொஞ்சிய மனைவி..! இணையத்தை கலக்கும் வீடியோ.!!!



sivaji-ganesan-rare-video-goes-viral

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடர்பான அரிதான பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உடல்நலக் குறைவு இருந்த காலத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காட்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெருக்கூத்து பாடலால் கவர்ந்த நடிகர் திலகம்

இதய நோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, தனது மருமகன் வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த தருணமே இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, முன் மேஜையில் தாளம் தட்டியபடியே தெருக்கூத்து பாடலை உற்சாகமாகப் பாடும் சிவாஜி கணேசனின் கம்பீரமான குரலும், கலை மீதான அவரின் ஆழமான பற்றும் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அன்றே கணித்த ஆர்.பி.சௌத்ரி.. இன்று நேரில் அதை காண அவரால் முடியவில்லை! துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட விஜய்..!!!!

நெகிழ வைத்த கமலா அம்மாவின் வார்த்தைகள்

பாடலை முடித்த உடன் அருகில் நின்றிருந்த அவரது மனைவி, “மூச்சு வாங்குதா மாமா?” என்று அக்கறையுடன் கேட்கும் தருணம் அந்த வீடியோவின் உணர்வுபூர்வமான பகுதியாக மாறியுள்ளது. அந்த ஒரு கேள்வியிலேயே இருவருக்கும் இடையிலான அன்பும், பாசமும் வெளிப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகும் அரிய நினைவுக் காட்சி

திரையுலகில் தனது நடிப்பால் தலைமுறைகளை கவர்ந்த அரிய வீடியோ தற்போது இணையத்தில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. திரைக்கு வெளியே சிவாஜி கணேசனின் எளிமையான இயல்பையும், குடும்பத்துடன் பகிர்ந்த இனிய தருணத்தையும் பதிவு செய்த இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத நினைவாக மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

 

இதையும் படிங்க: பட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே... நடிகை த்ரிஷா மீது எனக்கு ஒரு மயமான ஈர்ப்பு! உண்மையை போட்டு உடைத்த பிரபலம்...!!!