இந்த உணவுகளை சாப்பிடுறீங்களா? அப்போ உங்க வாழ்நாள் குறைவாகுமாம்... எச்சரிக்கை.!



These Everyday Foods May Reduce Your Lifespan: Health Warning

மோசமான வாழ்க்கைமுறை உணவுப்பழக்க வழக்கம் மிகப்பெரிய உடல்நலக்குறைவுகளுக்கு காரணமாக அமையும்.

பிரச்சனை:

ஒவ்வொருவரும் தங்களின் தினசரி பணிகளை முடிக்க உணவுகளை சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் உணவு நமக்கு உடலுக்கான ஆற்றலாக இல்லாமல் பிற பிரச்சனைகளை உண்டாக்கும் வகையில் இருக்க கூடாது. அதிக வெப்பத்தில் பொரித்த உணவுகளை நாம் சாப்பிட்டால், உடலில் பிரீ ரேடிக்கல் உருவாகும். இது செல்களை சேதப்படுத்தி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை குறைக்கும். சுருக்கம், அலர்ஜி, முகப்பரு பிரச்சனை ஏற்படும்.

இதையும் படிங்க: ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்குறீங்களா? வயது அதிகரிக்கும் அபாயம்..!

health tips

நீரிழப்பு:

வெள்ளை ரொட்டியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட மாவுசத்து இருக்கும். இது உடலில் அட்வான்சுடு கிளைக்கேஷன் ப்ராக்டக்ஸ் எனப்படும் பொருளை உண்டாக்கும். இது உடலின் அலர்ஜியை அதிகரிக்கும். முதுமையை விரிவாக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியம், கொழுப்பு இருக்கும். இதனை அதிகம் சாப்பிட்டால் சருமத்தில் நீரிழப்பு ஏற்படும். கொலாஜனை சேதப்படுத்தும்.

உப்பு உடலுக்கு அத்தியாவசியமானது என்றாலும், அதிகமானால் தீங்கு ஏற்படும். அதிக உப்பு சரும வறட்சி முதுமையை உண்டாக்கும். அதிகம் காரத்தன்மை கொண்ட உணவு உடலின் அலர்ஜியை அதிகரிக்கும். சருமத்தில் பருக்களை உண்டாக்கும். முதுமை விரைவாகும்.
 

இதையும் படிங்க: சாப்பிட்டதும் இவ்வாறான விஷயங்களை செய்றீங்களா? ரொம்ப ஆபத்து.. உஷார்.!