ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்குறீங்களா? வயது அதிகரிக்கும் அபாயம்..!
உடல், செல் மட்டத்தில் நிகழும் மாற்றம் குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
செல்களில் மாற்றம்:
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும் என பலரும் விருப்புகின்றனர். இதனால் மதுவை தவிர்ப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது கையில் எடுக்கப்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் ஒருசில அன்றாட வழக்கத்தையும் மாற்ற வேண்டும். நமக்கு வயது ஆவது என்பது உடலில் சுருக்கம், நரை முடி ஆகியவற்றுடன் நின்றுபோவதில்லை. இது உடலின் செல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: இளைஞர்களின் புதிய ட்ரெண்ட்.. ஏன் ஜிம் கலாச்சாரம் வேகமாக வளர்கிறது?
உட்கார்ந்து இருப்பது:
பலரும் தற்போது உட்கார்ந்து வேலை பார்த்து வரும் நிலையில், ஒருநாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேலாக அமர்ந்து இருக்கின்றனர். உடற்பயிற்சி செய்யாத நபர்கள் இதனால் உடல்பருமனை எதிர்கொண்டு வருகின்றனர். புகைபிடித்தலுக்கு இணையான இறப்பு விகிதத்தையும் இது ஏற்படுத்தும். தினமும் 60 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் இந்த அபாயத்தை குறைக்கும். நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் வளர்சிதை மாற்றம் ஏற்படும்.

உறக்கமின்மை:
ஒரு நபர் தனக்கு 5 மணிநேர உறக்கம் போதும் என நினைத்தால், அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். உறக்கத்தின்போது உடல் தன்னைத்தானே சரிசெய்யும் நிலையில், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். உறக்கமின்மை, சரும பாதிப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு, நினைவாற்றலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனஅழுத்தம்:
அதிக அளவிலான மனஅழுத்தம் உடலில் கார்டிசோல் ஹார்மோனை அதிகரிக்கும். இதனால் சருமம் பாதிக்கப்பட்டு சுருக்கம் ஏற்படும். இதயம், செரிமானம், மனஅழுத்தம் ஏற்படுத்தும். அதிகம் செல்போன் பார்ப்பதால் வயதாவது விரைவாகும். இதனால் உறக்க சுழற்சி பாதிக்கப்படும். உடலில் நீர்சத்து குறையும். சருமம் பொலிவிழக்கும். அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஜிம் பிரியர்களே.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. மறந்தும் செய்யக்கூடிய தவறுகளும், ஸ்மார்ட் டிப்ஸ்.!