உன்ன சும்மா விட மாட்டேன்டா... தினமும் கனவுல வந்து பயமுறுத்துன நண்பன்! 20 நாட்களாக தூங்க முடியாமல் போலிஸ்சிடம் ஓடிய பிரபு! பின்னணியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை...!!!



dombivli-murder-accused-surrenders-after-20-days

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் நண்பனைக் கொலை செய்து உடலை மறைத் நபர், 20 நாட்களுக்குப் பிறகு காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். அக்டோபர் 9ஆம் தேதி நடந்த கொலை தொடர்பாக பிரபு கரக்டே என்பவர் சரணடைந்த நிலையில், உடலை மறைக்க உதவியதாகக் கூறப்படும் அவரது வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு

பிரபு கரக்டேவும் விஷால் கதமும் நெருங்கிய நண்பர்கள். அக்டோபர் 9ஆம் தேதி இருவரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிரபு, விஷாலைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: உட்கார்ந்து இருந்தா ஜோலி முடிந்திருக்கும்...! கழிப்பறை கோமோடிற்குள் கேட்ட உஷ் உஷ் சத்தம்! திறந்து பார்த்த போது சுருண்டு கிடந்த ராட்சத கருநாகம்...! ஷாக் வீடியோ...!!!

சாக்கில் கட்டி உடலை மறைத்ததாக புகார்

கொலைக்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த பிரபு, தனது வீட்டு உரிமையாளர் சந்தேஷின் உதவியை நாடியுள்ளார். இருவரும் சேர்ந்து விஷாலின் உடலை ஒரு சாக்கில் வைத்து, நள்ளிரவில் சிற்றோடை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியுள்ளனர்.

இதையடுத்து, கொலை தொடர்பான தகவல் வெளியில் வராமல் இருக்கும் என பிரபு நினைத்ததாக தெரிகிறது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக காவல்துறையை அணுகியுள்ளார்.

20 நாட்களுக்குப் பிறகு காவல்துறையில் சரண்

கொலை நடந்தது முதல் தொடர்ந்து தூக்கமின்றி தவித்ததாகவும், இறந்த நண்பர் கனவில் வந்து பயமுறுத்தியதாகவும் பிரபு தெரிவித்துள்ளார் . இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், 20 நாட்களுக்குப் பிறகு தானாகவே காவல்துறையிடம் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து பிரபு கரக்டே மற்றும் உடலை மறைக்க உதவியதாகக் கூறப்படும் வீட்டு உரிமையாளர் சந்தேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை மற்றும் உடலை மறைத்தது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: 3 வயது சிறுமிக்கு சகோதரனுடன் விளையாடும்போது நேர்ந்த விபரீதம்! இறுதியில் நடந்த அந்த ஒரு அதிசயம்..!!!