மனைவியுடன் நெருங்கியதால் ஆத்திரம்.. அரங்கேறிய கொடூர கொலை.. ஈரோட்டில் பரபரப்பு.!
கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டார்.
தம்பதிகள்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம், காந்திஜி வீதியில் வசித்து வருபவர் கோபிநாத் (வயது 26). இவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி ஆவார். கோபிநாத்தின் மனைவி மஞ்சு. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மணல்மேடு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!
வேறொருவருடன் மனைவியுடன் பேசினார்:
வெண்டிபாளையம், காந்திஜி வீதியில் வசித்து வருபவர் விவேக் (வயது 29). இவரின் மனைவியுடன் கோபிநாத் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த விவேக் கோபிநாத்தை எச்சரித்து இருக்கிறார். இதனிடையே, கோபிநாத் ஜூன் 29ம் தேதி ஈரோடு சோலாப்பூரில் இருக்கும் மதுபானக்கடையில் மதுபானம் குடிக்கச் சென்றுள்ளார்.
அடித்து உதைத்தனர்:
இந்த தகவலை அறிந்த விவேக், தனது நண்பர்கள் சரவணன் (வயது 39), சதீஷ் (வயது 39) ஆகியோரிடம் கோபிநாத்தை அடித்து உதைக்குமாறு கூறியுள்ளார். நண்பரின் வாக்குமூலத்தின் பேரில் நேரில் சென்ற இருவரும், கோபிநாத்திடம் தகராறு செய்து, சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். கீழே இருந்த கல்லை எடுத்து முகம், தலையில் தாக்கியுள்ளனர்.
கொலை வழக்கு:
அபயக்குரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், சரவணன், சதீஷ் ஆகியோர் தப்பிச் சென்றனர். பின் கோபிநாத் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, சரவணன், சதீஷ், விவேக்கின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க: விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்.. அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன? சேலத்தில் கொடூரம்..!