கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!



Fisherman Arrested for Murdering Relative Amid Family Dispute in Kanyakumari

மனைவியின் சகோதரி குடும்பம் தான் தனது மனைவி பிரிந்து செல்ல காரணம் என நினைத்தவர், அப்பாவியை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கருத்து வேறுபாடு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியபட்டினம் பகுதியில் வசித்து வருபவர் ராஜன் (வயது 51). இவர் மீனவர் ஆவார். ராஜனின் மனைவி ஜாஸ்மின் லலிதா (வயது 46). தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, 2 மாதங்களுக்கு முன்னதாக தம்பதிகளுக்கு இடையே கருத்து முரண்பாடு நிலவி இருக்கிறது.

இதையும் படிங்க: என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!

சண்டை & கோபம்:

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜன் மனைவி லலிதாவை தாக்கி இருக்கிறார். இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு பெண்மணி, கொட்டில்பாடு பகுதியில் இருக்கும் சகோதரி மேரி கலாவின் (வயது 53) வீட்டுக்கு சென்றுள்ளார். உடன் பிள்ளைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.

Crime news

அழைப்பை ஏற்கவில்லை:

இதனிடையே, கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ராஜன் தனது மனைவியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மேரியின் வீட்டுக்குச் சென்று சண்டை செய்துள்ளார். ஆனால், கணவருடன் செல்ல பெண்மணி மறுத்துள்ளார். இதனால் தம்பதிகள் இடையே தகராறு தொடங்கி இருக்கிறது. பின் மேரி கலாவின் கணவர் புஷ்பநாதன் (வயது 56) சமாதானம் செய்து ராஜனை அனுப்பி வைத்துள்ளார்.

கொலை சம்பவம்:

இதனால் புஷ்பநாதன் தனக்கு ஆதரவாக பேசவில்லை என ராஜன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும், மனைவி தன்னுடன் வீட்டுக்கு வர புஷ்பநாதன் & அவரின் மனைவி மேரி கலா ஆகியோரே காரணம் என நினைத்துள்ளார். சம்பவத்தன்று மேரியின் வீட்டுக்குச் சென்ற ராஜன், தனியாக இருந்த புஷ்பநாதனை கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் புஷ்பநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்.. கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்.!