என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!
போதையில் மனைவியை கணவர் துன்புறுத்தி வந்ததால் கொலை சம்பவம் நடந்தது.
அழகிய குடும்பம்:
Salem News: சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தங்கம் (வயது 40). இவர் டேப் கட்டில் வேலை செய்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் பத்மா (வயது 34). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அப்போது 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, தங்கம் தனது குடும்பத்துடன் ஓராண்டுக்கு முன்பு வையாபுரி உடையார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
நடத்தையில் சந்தேகம்:
அப்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தங்கமும் போதையில் தனது மனைவியை அடித்து வந்துள்ளார். கடந்த 16ம் தேதி நஞ்சம்பட்டியில் இருந்த தங்கத்தின் தாயார் காலமாகி இருக்கிறார். இதனால் அவ்வப்போது தங்கத்தின் மனைவி பத்மா நஞ்சம்பட்டிக்கு வந்து சென்றுள்ளார். இதனால் தனது மனைவி உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றதாக சந்தேகப்பட்டு போதையில் தங்கம் தகராறு செய்து வந்துள்ளார்.
தலையில் கல்லைப்போட்டு கொலை:
ஒருகட்டத்தில் மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் காயமடைந்த பத்மா, ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். கணவர் தன்மீது தினமும் சந்தேகப்பட்டு போதையில் சித்ரவதை செய்து இருக்கிறாரே என வருத்தப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் கணவரின் செயல்பாடுகளால் வெறுப்படைந்தவர், குழந்தைகள் உறங்கியபின் கணவரின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதனால் தங்கத்தின் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
மனைவியின் வாக்குமூலம்:
இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர், நேரில் வந்து தங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பத்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், கணவர் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துவதால் கொலை செய்ததாக தெரிவித்து இருக்கிறார். மேலும், கணவரின் சகோதரர், கணவரின் உறவினர்களுடன் தான் தகாத உறவு வைத்திருப்பதாக குற்றம்சாட்டியதால் இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!