மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!
அம்பாசமுத்திரத்தை அதிரவைத்த கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கள்ளக்காதல் பழக்கம்:
Ambasamudram Crime News: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பெரியகுளம் தெருவில் வசித்து வருபவர் அஜித் (வயது 26). இவரின் மனைவி சுதா. தம்பதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் 6 மற்றும் 2 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, சுதாவுக்கும் - பக்கத்து வீட்டில் வசித்து வரும் திருமணம் ஆகாத இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து அஜித் தனது மனைவி சுதாவிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

தலையை வெட்டிக்கொலை:
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நேரத்தில் பணிமுடிந்து அஜித் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மனைவி வீட்டில் இல்லாத காரணத்தால், அவரை தேடி இருக்கிறார். சற்றும் எதிர்பாராத வகையில் சுதா ஆண் நண்பரின் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனை பார்த்த அஜித், ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று சாலையில் வைத்து அடித்து இருக்கிறார். பின் வீட்டுக்குள் அழைத்துச்சென்று கடுமையாக தாக்கி இருக்கிறார். கணவன் - மனைவி வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், சுதாவை அரிவாள் எடுத்து தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கணவர் கைது:
துண்டிக்கப்பட்ட தலையுடன் வீட்டு வாசலுக்கு வந்த அஜித், தலையை வாசலில் வைத்துவிட்டு காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து நேரில் வந்த அதிகாரிகள், சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!