கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்..! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக ரிப்போர்ட்..!!!



kolathur-vote-verification-vs-babu-reaction

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு சரிபார்ப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் போது எந்தவித முறைகேடோ, குளறுபடியோ கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொகுதியின் தேர்தல் முடிவைச் சுற்றியிருந்த விவாதங்களுக்கு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்கு சரிபார்ப்பு நிறைவு

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற வாக்கு சரிபார்ப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதிவான வாக்குகள் மற்றும் எண்ணிக்கை தொடர்பாக எந்த முரண்பாடும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் தேர்தல் நடைமுறை வெளிப்படையாக நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு ரிசல்ட்.... அம்பலமான அதிர்ச்சி உண்மையால் பரபரப்பு...!!!

தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வி.எஸ். பாபு வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டதாகக் கூறி தவெக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொளத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக குற்றச்சாட்டுக்கு பதில்

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.எஸ். பாபு, தேர்தலில் முறைகேடு நடந்ததாக திமுக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முழுமையாக ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையமே முறைகேடு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற அவதூறு குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

 

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்…! 11 வாக்குச்சாவடிகள் நிறைவு... அம்பலமான உண்மை தகவல்!!!