கொளத்தூர் தொகுதி தேர்தல் ரிசல்ட்…! 11 வாக்குச்சாவடிகள் நிறைவு... அம்பலமான உண்மை தகவல்!!!
சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT சரிபார்ப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கெனவே பெரும்பாலான இயந்திரங்களின் ஆய்வு நிறைவடைந்த நிலையில், எஞ்சியுள்ள இரண்டு இயந்திரங்களின் சரிபார்ப்பும் இன்று முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 வாக்குச்சாவடிகளின் ஆய்வு நிறைவு
திமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்ட 11 வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகள் ஏற்கெனவே முழுமையாக நிறைவடைந்துள்ளன. அதன்பின் மீதமிருந்த இரண்டு இயந்திரங்களின் ஆய்வும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இது நடக்க வைக்கத்தான் இவ்வளவு நாடகமா? தவெக-வின் மூன்று கட்ட அரசியல் திரைக்கதையை அவிழ்த்த திமுக MP அப்துல்லா...!!!
முறைகேடு எதுவும் இல்லை
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட VVPAT இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவித முறைகேடுகளோ, தொழில்நுட்பக் கோளாறுகளோ கண்டறியப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சரிபார்ப்பு நடவடிக்கைகள் சுமுகமாக முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றுடன் முழுமை பெறும் பணிகள்
தகவலின்படி, எஞ்சியுள்ள இரண்டு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகளும் இன்று நிறைவடைந்ததும், கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட முழு ஆய்வு செயல்முறை நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆணவ அரசியலால் ஆட்சிக்கே பாதிப்பு...! த.வெ.க. அரசை கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்..!!!