எப்படியெல்லாம் எமன் வருது பாருங்க...! பைக்கில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்! வயிற்றுக்குள் புகுந்த மரத்துண்டு.. வலி தாங்க முடியாமல் அலறிய வாலிபர்!!!
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் பைக்கில் சென்ற 22 வயது இளைஞர் மீது திடீரென மரக்கிளை விழுந்து விபரீதம் ஏற்பட்டுள்ளது. காய்ந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், அதன் உடைந்த பகுதி இளைஞரின் வயிற்றுக்குள் ஆழமாக புகுந்தது. பலத்த காயமடைந்த அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பைக் மீது திடீரென விழுந்த மரக்கிளை
கேந்திரபாரா பகுதியைச் சேர்ந்த பபித்ர பிரதான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த காய்ந்த மரத்தின் கிளை ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து அவரது பைக் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர், பைக்குடன் சாலையில் கீழே விழுந்தார்.
வயிற்றுக்குள் புகுந்த மரக்கிளை
கீழே விழுந்தபோது உடைந்த மரக்கிளையின் ஒரு பகுதி பபித்ர பிரதானின் வயிற்றில் ஆழமாக புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் வலியால் சாலையிலேயே சரிந்தார். நிலைமையை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக கட்டாக் மாற்றம்
இதையடுத்து கேந்திரபாரா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காயம் தீவிரமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரக்கிளை முறிந்து விழுந்து இளைஞரின் வயிற்றுக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரக்கிளை விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு படித்த மாணவி 2 நாட்களாக மாயம்! தேடி திரிந்த பெட்றோற்கு இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி...! நடந்தது என்ன? போலீஸ் விசாரணை...!!!