10 ஆம் வகுப்பு படித்த மாணவி 2 நாட்களாக மாயம்! தேடி திரிந்த பெட்றோற்கு இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி...! நடந்தது என்ன? போலீஸ் விசாரணை...!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாயமான 15 வயது சிறுமியும், 21 வயது வாலிபரும் அங்கமாலி ரயில் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ரயில் மோதி இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் அடையாளம் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு மாயம்
கண்ணநல்லூர் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (21) என்பவரும், அவரது உறவினரான வளவஞ்சால் பகுதியைச் சேர்ந்த விஸ்மையா (15) என்பவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். விஸ்மையா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் இருவரையும் காணவில்லை.
உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், கண்ணநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மாயமான இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அங்கமாலி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 1.45 மணியளவில் அங்கமாலி ரயில் நிலையத்தில் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சிறுமியும், வாலிபரும் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் அங்கமாலி போலீசாரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் விரைந்து சென்று உடல்களை மீட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மாயமான அபிலாஷ் மற்றும் விஸ்மையா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
தற்கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை
மாயமான இருவரும் ரயில் பாதைக்கு சென்றது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயில் நிலைய உயிரிழப்பு தற்கொலையா அல்லது எதிர்பாராத வகையில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இருவரும் எப்போது அங்கமாலி வந்தனர், ரயில் பாதைக்கு எப்படி சென்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லம் இளைஞர்கள் மாயம் தொடர்பான புகாரின் பின்னணி குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.