இப்படி ஒரு மகளா? நள்ளிரவில் போனைக் கேட்ட சிறுமி! கொடுக்க முடியாதுன்னு சொன்ன தாய்... அடுத்த நொடியே மகள் செய்த அதிர்ச்சி காரியம்! ஷாக் வீடியோ...!!!
நள்ளிரவில் களைப்புடன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம், சிறுமி போனை கேட்டு அடம்பிடித்துள்ளார். ஆனால், களைப்பில் இருந்த தாய் போனை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் சிறுமி செய்த செயல் தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போன் தர மறுத்ததால் ஆத்திரம்
தாய் போனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுமி, அருகில் இருந்த பாத்திரத்தை எடுத்து தாயின் தலையில் அடித்துள்ளார். குழந்தையின் எதிர்பாராத நடவடிக்கையால் தாய் அதிர்ச்சியடைந்த நிலையில், நடந்ததை பார்த்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ மொபைல் போன் பயன்பாடு தொடர்பான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோ 3.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உண்மையா? நாடகமா? இணையத்தில் விவாதம்
இக்கால குழந்தைகள் போனுக்காக அதிகமாக அடம்பிடிப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், வீடியோ உண்மையில் நடந்த சம்பவத்தை பதிவு செய்ததா அல்லது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட காட்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வைரல் வீடியோ தொடர்பான முழுமையான பின்னணி உறுதி செய்யப்படாத நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது.
एक थकी हुई माँ देर रात अपने फ़ोन पर कुछ देख रही थी तभी उसकी छोटी बच्ची भी फ़ोन देखने की ज़िद करने लगी
— Neeraj Kumar (@Neerajkathpal74) September 19, 2026
माँ ने थकान में उसे जवाब तो दे दिया
लेकिन अगले ही पल बच्ची ने जो किया उसकी माँ ने सपने में भी कल्पना नहीं की थी 🥱 pic.twitter.com/vMTEuMSRSQ