வயல்வெளியில் 26 வயது பெண் கொடூர கொலை! தாய் இறந்தது கூட அறியாமல்.... தாயின் உடல் மீது படுத்து அம்மா எந்திரிம்மா... கதறும் குழந்தை! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!



karnataka-sneha-murder-child-cries-over-mothers-body

கர்நாடக மாநிலத்தில் வயல்வெளியில் 26 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் உயிரிழந்தது தெரியாமல், அவரது 2 வயது குழந்தை சடலத்தின் மீது படுத்துக்கொண்டு 'அம்மா... அம்மா எந்திரிம்மா...' என அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள்

கொலை செய்யப்பட்டவர் கர்நாடகாவைச் சேர்ந்த சினேகா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். வயல்வெளியில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றியபோது, தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், சினேகா கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: மெடிக்கல் ஷாப்பிற்கு சென்ற கணவர்...! ஸ்கூட்டியில் காத்திருந்த பெண்ணை குறிவைத்த கொள்ளையர்கள்...பட்டப்பகலில் நடந்த பயங்கர காட்சி!!!

கணவர், மற்றொரு நபர் கைது

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் சினேகாவுக்கு அமித் என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், ஷுபம் என்பவருடன் சினேகாவுக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சினேகாவின் கணவர் அமித் மற்றும் ஷுபம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா கொலை வழக்கில் கொலைக்கான காரணம், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குழந்தையின் கதறல் சோகத்தை ஏற்படுத்தியது

தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவரது உடலின் மீது படுத்திருந்த குழந்தை, எழுந்திருக்குமாறு தொடர்ந்து அழைத்த காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது போலீசார் சேகரித்துள்ள தடயங்கள் மற்றும் விசாரணை தகவல்களின் அடிப்படையில் கொலைக்கான முழு பின்னணியை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இதையும் படிங்க: கட்டின புருஷனை காரப்பொடியை கண்ணில் தூவி கம்பியால் தாக்கிய மனைவி, மகனும் கூட! இவ்வளவு பண்ணியும் நீ இன்னும் சாகலையா? இறுதியில் இரண்டு பெரும் இணைந்து அரங்கேட்றிய வெறிச்செயல்... கொடூர சம்பவம்!!!