கட்டின புருஷனை காரப்பொடியை கண்ணில் தூவி கம்பியால் தாக்கிய மனைவி, மகனும் கூட! இவ்வளவு பண்ணியும் நீ இன்னும் சாகலையா? இறுதியில் இரண்டு பெரும் இணைந்து அரங்கேட்றிய வெறிச்செயல்... கொடூர சம்பவம்!!!
மேடக் மாவட்டம் தூப்ராண் மண்டலம் இஸ்லாம்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக 48 வயது நபர் கொலை செய்யப்பட்டார். கொண்டாபூர் ஸ்ரீராமுலு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது மனைவி சபிதா மற்றும் மகன் பரத் இணைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இருவரும் பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
காரப்பொடி தூவி கம்பியால் தாக்குதல்
தகவலின்படி, குடும்பத்தில் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சபிதாவும் பரத்தும் சேர்ந்து ஸ்ரீராமுலுவை தாக்கியுள்ளனர். முதலில் அவரது கண்ணில் காரப்பொடியைத் தூவிய பின்னர், கம்பியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கிரானைட் கல்லால் தலையில் தாக்கியதாக தகவல்
கம்பியால் தாக்கியதில் ஸ்ரீராமுலு உயிரிழக்காத நிலையில், இருவரும் தொடர்ந்து தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த கிரானைட் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராமுலு உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் சரணடைந்த தாய், மகன்
கொலை நடந்ததைத் தொடர்ந்து சபிதாவும் பரத்தும் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குடும்பத் தகராறின் பின்னணி, கொலைக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வரும் போலீசார், கொலை நடந்த இடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் குடும்பத் தகராறு தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
మెదక్ జిల్లా తూప్రాన్ మండలం ఇస్లాంపూర్లో దారుణం
— PulseNewsBreaking (@pulsenewsbreak) September 19, 2026
భర్త కొండాపూర్ శ్రీరాములు (48)పై భార్య, కుమారుడి దాడి
కళ్లలో కారం చల్లి, కర్రతో శ్రీరాములుపై దాడి
చనిపోకపోవడంతో గ్రానైట్ రాయితో తలపై మోది హత్య
కుటుంబ కలహాల నేపథ్యంలో ఘటన జరిగినట్లు సమాచారం
హత్య అనంతరం పోలీస్ స్టేషన్లో… pic.twitter.com/85rifO0sR0