24 பேருக்கு அரசு வேலை அவுட்! 13 ஆபீஸ்கள்... 6 செக்போஸ்ட்டுகள்...! திடீர் ரெய்டால் கோடிகளை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை..! ஒட்டுமொத்த தமிழகமே அதிருது...!!!



tamil-nadu-dvac-july-anti-corruption-crackdown

தமிழகத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மேற்கொண்ட தொடர் பொறிவைப்பு, சோதனை நடவடிக்கைகளில் 24 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் ரூ.1.31 கோடிக்கும் அதிகமான பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

ஒரே மாதத்தில் 24 அரசு ஊழியர்கள் கைது

ஜூலை 1 முதல் 31 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 24 பொறிவைப்பு நடவடிக்கைகளில், அறநிலையத்துறை இணை ஆணையாளர், வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர், மின்வாரிய பொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24 அரசு ஊழியர்கள் சிக்கினர். அரசுப் பணிகளை செய்து தர ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் வாங்கியபோதே அவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை! காரணத்தை கேட்டா ஆடிப்போயிருவீங்க.... பகீர் சம்பவம்..!!!

அரசு அலுவலகங்கள், சோதனைச் சாவடிகளில் அதிரடி சோதனை

பொறிவைப்பு நடவடிக்கைகளுடன், மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற ஆய்வில் கணக்கில் வராத ரூ.13.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 6 எல்லைச் சோதனைச் சாவடிகளில் நடந்த சோதனையில் ரூ.9.87 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 17-ஆம் தேதி தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.13.88 லட்சம் ரொக்கமும், சந்தேகத்துக்குரிய வகையில் G-Pay மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.94.69 லட்சமும் கண்டறியப்பட்டது. இதனால் மொத்தமாக ரூ.1.31 கோடிக்கும் அதிகமான தொகை அதிகாரிகள் வசப்படுத்தியுள்ளனர்.

கைது மட்டுமல்ல... துறைரீதியான நடவடிக்கையும் தீவிரம்

லஞ்சப் புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கையுடன் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி சிறப்பு காவல்படை பட்டாலியனில் விடுப்பு வழங்க லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று போலீசார் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், திருப்பூரில் ஒப்பந்தப் பணிக்கான பில் தொகையை வழங்க ரூ.20,000 லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், சேலத்தில் மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுத் துறைகளில் ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

 

இதையும் படிங்க: 16 வயது மாணவி கர்ப்பம்.. கீழே விழுந்ததில் இறந்த சிசு.. சிக்கலில் காதலன்.! விருதுநகரில் பகீர்.!