எனக்கு மனைவி வேணாம்... மனைவியோட சித்தி தான் வேணும்! பிடிவாதம் பிடித்து குடும்பத்தினருக்கு மிரட்டல் விட்ட 26 வயது வாலிபர்... உ.பி-யில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் மனைவியின் சித்தியை காதலித்து திருமணம் செய்ய இளைஞர் ஒருவர் பிடிவாதம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான தேஜ்வீர், 45 வயது லதாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி அவருடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவகாரம் போலீசார் விசாரணை வரை சென்றுள்ளது.
அடிக்கடி சென்ற வீட்டில் ஏற்பட்ட பழக்கம்
மைன்புரியைச் சேர்ந்த தேஜ்வீருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, கணவரை இழந்து 5 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த அவரது மனைவியின் சித்தி லதாவின் வீட்டிற்கு தேஜ்வீர் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அது காதல் உறவாக மாறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் தஞ்சம்
விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும், இருவரையும் பிரித்து வைக்க உறவினர்கள் முயன்றனர். ஆனால், ஒருவரையொருவர் பிரிய முடியாது என இருவரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லதாவை அழைத்துக் கொண்டு தேஜ்வீர் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு, லதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அவரது 5 குழந்தைகளையும் தானே பொறுப்பேற்று வளர்க்கத் தயாராக இருப்பதாகவும் தேஜ்வீர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குடும்பத்தினர் கூறும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்
இதற்கு லதாவின் குழந்தைகளும் உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லதாவின் மூத்த மகன் அன்ஷுல், குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது தனது தாயும் தேஜ்வீரும் கோபமடைந்ததாக கூறியுள்ளார்.
மேலும், இருவரையும் பிரிக்க முயன்றபோது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தீ வைக்க முயற்சி நடந்ததாகவும், ஒன்றாக வாழ விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாய் மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தீ வைக்க முயற்சி நடந்ததா, குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்து புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால், தேஜ்வீர் மற்றும் லதாவின் உறவைச் சுற்றியுள்ள குடும்ப மோதல் தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது.