விதி இப்படி விளையாட்டிட்டே... ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கை! போர்வைக்குள் பதுங்கி இருந்த எமன்.... அலறிய குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி! பெரும் சோகம்...!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தங்கையை போர்வைக்குள் பதுங்கியிருந்த விஷப்பாம்பு கடித்தது. மூர்கியா கிராமத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில் 10 வயது சிறுமி காமினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது அண்ணன் பங்கஜ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
போர்வைக்குள் பதுங்கியிருந்த விஷப்பாம்பு
ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில் குடும்பத்தினர் அனைவரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரே கட்டிலில் படுத்திருந்த காமினி மற்றும் அவரது அண்ணன் பங்கஜ் இருந்த போர்வைக்குள் பாம்பு மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 4 மகன்கள் இருந்தும் இறுதிச்சடங்கில் அநாதையான தாய்.. சமூக அமைப்பினர் செய்த நெகிழ்ச்சி செயல்!
முதலில் 10 வயதான காமினியை பாம்பு கடித்துள்ளது. பின்னர் அதே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பங்கஜின் காலில் சுற்றிக் கொண்டு கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஷப்பாம்பு கடி ஏற்பட்டதை அறிந்த இருவரும் அலறியதால், குடும்பத்தினர் உடனடியாக அங்கு ஓடி வந்தனர்.
சிறுமி உயிரிழப்பு; அண்ணனுக்கு தீவிர சிகிச்சை
குடும்பத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், காமினியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இறுதியில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த பங்கஜுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம்பு கடி சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் பாதிக்கப்பட்டதில் மூர்கியா கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.. வெளியான சிசிடிவி காட்சியால் பெங்களூருவில் அதிர்ச்சி!