காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.. வெளியான சிசிடிவி காட்சியால் பெங்களூருவில் அதிர்ச்சி!



Boy attack knife girl girl viral video

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண்ணை, சூர்யா என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை அம்ருதா ஏற்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சூர்யா அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 13-ம் தேதி அம்ருதா வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கேஸ் லாரியின் பின்னால் மறைந்திருந்த சூர்யா திடீரென அவரை வழிமறித்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அம்ருதாவை பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பொதுமக்களே உஷார்.. பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அம்ருதா, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், ஜூலை 15-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் சூர்யா மற்றும் அவரது சகோதரர் தனுஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்... மனைவி, மாமியார் கைது.. பின்னணியில் கள்ளத்தொடர்பு?